சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள், நாட்டின் வழிபாட்டு இடங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டின் கலாசாரத்தை அவமானமாக கருதியதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசை மறைமுகமாக விமர்சித்தார்.
எனினும், கடந்த 10 ஆண்டுகளில் அந்நிலை மாறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அசாமில் 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து விட்டு முன்னேற முடியாது என்றார்.